270 செம்மர கட்டைகள் கடத்தல்; ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 14 பேர் கைது


270 செம்மர கட்டைகள் கடத்தல்; ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 14 பேர் கைது
x
தினத்தந்தி 19 Dec 2021 4:45 PM IST (Updated: 19 Dec 2021 4:45 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ரூ.ஒன்றரை கோடி மதிப்பிலான 270 செம்மர கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.



சித்தூர்,

ஊத்துக்கோட்டை-புத்தூர் நெடுஞ்சாலையில், பாலமங்கலம் கிராமம் சந்திப்பு அருகே அதிகாலை 2 மணி அளவில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வந்த சரக்கு வேனில் 20 செம்மர கட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

வேனில் இருந்த 4 பேரையும் கைது செய்து விசாரித்ததில், சதாசிவ கோனா செல்லும் வழியில் உள்ள பாண்டுலய்யா கோனா மலையில் செம்மரங்களை வெட்டும் கூலித்தொழிலாளர்கள் 14 பேர் இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர், திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரை சேர்ந்த அந்த 14 பேரையும் கைது செய்ததுடன், 270 செம்மரக்கட்டைகளையும், சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.ஒன்றரை கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story