நண்பர்களுடன் சேர்ந்து காதலியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த காதலன்..! - 3 பேர் கைது


நண்பர்களுடன் சேர்ந்து காதலியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த காதலன்..! - 3 பேர் கைது
x
தினத்தந்தி 20 Dec 2021 7:02 AM GMT (Updated: 2021-12-20T12:32:32+05:30)

காதலியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் வெப்படை தனியார் நூற்பாலையில் பணிபுரியும் வடமாநில பெண் தொழிலாளியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.

முன்னதாக வெப்படையில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்த வந்த பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் இருவரிடையே காதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இளைஞர் அந்தப் பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். வீட்டில் வைத்து நண்பர்கள் இருவருடன் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த பெண் மயக்கம் அடையவே மூவரும் தப்பி ஓடியுள்ளனர்.

வெப்படை காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வெப்படை போலீசார் அந்த 3 இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதையடுத்து திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.

Next Story