நோய் தொற்று; மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைக்க தமிழக அரசு உத்தரவு


நோய் தொற்று; மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைக்க தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 20 Dec 2021 7:57 PM IST (Updated: 20 Dec 2021 7:57 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என சுகாதார துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.



சென்னை,

தமிழகத்தில் கொரோனாவின் புதிய வகையான ஒமைக்ரான் பாதிப்பு நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டது.  அவருடன் தொடர்பில் இருந்த வேறு சிலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  இந்த நிலையில், தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அதிகரிக்கும் நோய் தொற்றை கட்டுப்படுத்திட உரிய நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.


Next Story