தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நேர்முக உதவியாளராக இருந்த கோ.சண்முகநாதன் காலமானார்.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் உதவியாளாராக இருந்த கோ.சண்முகநாதன்(வயது 80) காலமானார். உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகநாதன் சிகிச்சை பலனின்றி காலமானர்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக கருணாநிதியின் நேர்முக உதவியாளராக சண்முகநாதன் இருந்தார். கருணாநிதியின் நிழல் என்றே அரசியல் வட்டாரத்தில் அழைக்கப்பட்ட சண்முகநாதன், 1967 ஆம் ஆண்டு முதல் கருணாநிதியின் கடைசிக்காலம் வரை உதவியாளராக இருந்தார்.
Related Tags :
Next Story