ராணுவ உடையில் வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில வாலிபர்..!


ராணுவ உடையில் வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில வாலிபர்..!
x
தினத்தந்தி 21 Dec 2021 5:01 PM IST (Updated: 21 Dec 2021 5:01 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ராணுவ உடையில் வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர்,

கேரளாவில் இருந்து ரப்பர் பொருட்கள் ஏற்றி வந்த லாரியை எடை போடுவதற்காக திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஜனபச்சத்திரம் பகுதியில் ஓட்டுநர் நிறுத்தியிருக்கிறார். அப்போது ராணுவ உடையில் வந்த ஒருவர் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்று கூறியதோடு கத்தியை காட்டி மிரட்டி, ஓட்டுநரிடம் இருந்து 3 ஆயிரம் ரூபாய் பறித்ததாக கூறப்படுகிறது. 

ராணுவ உடையில் வழிப்பறியில் ஈடுபட்டதை அறிந்த பொதுமக்கள், அந்த நபரை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபரின் பெயர் சத்யவீர் என்பதும் அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்து பொன்னேரி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.  

Next Story