சிறப்பு டி.ஜி.பி.யின் வழக்கு இறுதி விசாரணைக்காக தள்ளிவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு


சிறப்பு டி.ஜி.பி.யின் வழக்கு இறுதி விசாரணைக்காக தள்ளிவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 22 Dec 2021 12:24 AM IST (Updated: 22 Dec 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு டி.ஜி.பி.யின் வழக்கு இறுதி விசாரணைக்காக தள்ளிவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழக சிறப்பு டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவருக்கு எதிராக பாலியல் புகாரை விசாரிக்க கூடுதல் தலைமைச்செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு, அந்த கமிட்டி விசாரணையை நடத்தி, அறிக்கையை அரசுக்கு சமர்பித்துள்ளது.

இந்த விசாகா கமிட்டி அமைத்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு டி.ஜி.பி., வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசு தரப்பில் விசாகா கமிட்டியின் அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தநிலையில், நீதிபதி வி.பார்த்திபன் முன்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், விசாகா கமிட்டி தீர்ப்பாயம் அந்தஸ்தில் உள்ள ஒரு அமைப்பாகும். எனவே, இந்த கமிட்டியை எதிர்மனுதாரர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை நீதிபதி ஏற்க மறுத்து விட்டார். விசாகா கமிட்டி மீது மனுதாரர் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதால், அதை நீக்க முடியாது. இந்த வழக்கின் இறுதி விசாரணை வருகிற ஜனவரி 5-ந்தேதி நடைபெறும் என்று உத்தரவிட்டார்.

Next Story