யானைகள் அடிபட்டு பலியாவதை தடுக்க - ரெயில் என்ஜின்களில் ‘தெர்மல் ஸ்கேனிங் கேமராக்கள்' அமைக்கலாம்
ரெயிலில் அடிபட்டு பலியாவதை தடுக்க, யானைகள் கடக்கும் பகுதிகளிலும், ரெயில் என்ஜின்களிலும் அதிநவீன தெர்மல் ஸ்கேனிங் கேமராக்கள் அமைப்பது குறித்து ஆய்வு செய்யலாம் என்று தெற்கு ரெயில்வே நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு யோசனை தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் யானைகள் வேட்டையாடப்படுவதை தடுப்பது தொடர்பாக ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு மதுரை கிளை, யானைகள் சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்பின்னர் இந்த வழக்குகள் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டு, நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சதீஷ்குமார் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, யானைகள் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயில்களில் அடிபட்டு பலியாகின்றன. இதை தடுக்க என்ன வழி என்று தெற்கு ரெயில்வே நிர்வாகத்துக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நடமாட்டம் கண்காணிப்பு
அப்போது தெற்கு ரெயில்வே சார்பில் வக்கீல் பி.டி.ராம்குமார் ஆஜராகி, ‘மதுக்கரையில் இருந்து பாலக்காடு வரையிலான 19 கிலோ மீட்டர் தூரத்துக்கு யானைகள் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயில்களில் அடிபட்டு பலியாகின்றன. இதை தடுக்க வனத்துறை மற்றும் ரெயில்வே துறைக்குச் சொந்தமான கண்காணிப்பு கோபுரங்களில் நின்று யானை நடமாட்டத்தைக் கண்காணித்து, அதுகுறித்து அருகில் உள்ள ரெயில் நிலையங்களுக்கு வாக்கிடாக்கி மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனால், இந்த பகுதியில் ரெயிலை மெதுவாக இயக்கியதன் மூலம் 69 யானைகள் ரெயிலில் அடிபடாமல் காப்பாற்றப்பட்டுள்ளன. சமீபத்தில் 3 யானைகள் ரெயிலில் அடிப்பட்டு பலியானாலும், அந்த யானைகள் தனியார் நிலம் வழியாக வந்ததால், அவற்றை கண்காணிக்க முடியவில்லை’ என்று கூறினார்.
தானியங்கி ஒலிபெருக்கி
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், யானைகள் மட்டுமல்ல வனவிலங்குகள் எதுவும் ரெயிலில் அடிபட்டு பலியாகக்கூடாது. இதை தடுக்க என்ன வழி என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘இந்த 19 கி.மீ. தூரத்துக்குள் யானைகள் கடந்து செல்ல தண்டவாளங்களுக்கு அடியில் பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் ரெயில்கள் வரும்போது தானியங்கி ஒலிபெருக்கி மூலம் ஒலியை எழுப்பி, விலங்குகள் விரட்டப்படும்’ என்று ரெயில்வே வக்கீல் விளக்கம் அளித்தார்.
அதையடுத்து, ‘வனவிலங்குகள் பலியாவதை நிரந்தரமாக தடுக்க ரெயில் தண்டவாளங்களை ஒட்டி சூரிய மின்சக்தி வேலிகளை அமைக்கலாம். யானைகள் கடக்கும் பகுதிகளிலும், ரெயில் என்ஜின்களிலும் ‘தெர்மல் ஸ்கேனிங்' கருவியை அதிநவீன கேமராக்களுடன் அமைப்பது குறித்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் ஆய்வு செய்யலாம்’ என்று நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர். பின்னர், இதுகுறித்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story