வேலூரில் லேசான நில அதிர்வு - ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு


வேலூரில் லேசான நில அதிர்வு - ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு
x
தினத்தந்தி 23 Dec 2021 4:19 PM IST (Updated: 23 Dec 2021 4:19 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் இன்று பிற்பகல் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் இன்று பிற்பகல் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிட்கர் அளவில் 3.5 ஆக பதிவான இந்த நில அதிர்வு பெரிய அளவில் உணரப்படவில்லை. அதேவேளை கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. 

ஆனாலும், இந்த நில அதிர்வால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இன்று பிற்பகல் 3.14 மணியளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் சித்தூரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வேலூர் மாவட்டத்திலும் உணரப்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேலூரில் இருந்து 50 கிலோமீட்டரில் மேற்கு-வடமேற்கு திசையில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story