அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறவு தொடரும் அண்ணாமலை அறிக்கை
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறவு தொடரும் அண்ணாமலை அறிக்கை.
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றிகரமாக முன்னிறுத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. தற்போது மிகவும் பலமாகவும், உறுதியாகவும் இருக்கிறது. இந்த பலமும், உறுதியும் மேலும் வலுப்பெறும் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உறுதியாக இருக்கிறது. இந்த உறவும், உறுதியும் இனிமேலும் இப்படியே தொடர்வதையே பா.ஜ.க. கட்சி விரும்புகிறது.
அ.தி.மு.க.வில் யாரை இணைத்துக் கொள்ள வேண்டும்? யாரை எல்லாம் இணைத்துக் கொள்ளக்கூடாது? என்பதில் கருத்து சொல்ல எந்த மாற்று கட்சிக்கும் உரிமை இல்லை.
தேசிய ஜனநாயக கூட்டணி சிறப்பாக செயல்பட்டது. இனிவரும் காலத்திலும் சிறப்பாக செயல்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story