சென்னையில் பாதுகாப்பற்ற முறையில் 40 பள்ளி கட்டிடங்கள்: மாநகராட்சி அறிவிப்பு


சென்னையில் பாதுகாப்பற்ற முறையில்  40 பள்ளி கட்டிடங்கள்: மாநகராட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Dec 2021 7:59 PM IST (Updated: 24 Dec 2021 7:59 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பாதுகாப்பற்ற முறையில் 40 பள்ளி கட்டிடங்கள் உள்ளதாகவும், மாணவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் கண்டறிந்துள்ளது.

சென்னை,

நெல்லையில் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்ததை அடுத்து, மாவட்ட நிர்வாகங்கள் பள்ளி கட்டிடங்களின் தரத்தை ஆய்வு செய்து வருகிறது. பள்ளிக் கட்டிடங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி, கல்விப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவை அமைத்தது.

இக்குழுவினர், அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு மேற்கொண்டர். அப்போது சென்னையில் பாதுகாப்பற்ற முறையில் 40 பள்ளி கட்டிடங்களை அவர்கள் கண்டறிந்துள்ளனர். 

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது, பல்வேறு பள்ளி வளாகங்களில் கட்டிடங்கள் உள்ளன. "பலவீனமான கட்டிடங்களில் சிலவற்றின் சுவர்கள் மற்றும் மேற்கூரைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் நடவடிக்கைக்காக தலைமையகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது" என்று அவர்கள் தெரிவித்தனர்.

40 பலவீனமான கட்டிடங்கள் தவிர, பள்ளிகளில் பயன்படுத்தப்படாத 32 கட்டிடங்களையும் குழு கண்டறிந்துள்ளது. பயன்படுத்தப்படாத கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்படும். மேலும், தரமற்ற கட்டிடங்களை இடிப்பதா அல்லது மறுசீரமைப்பதா என்பது பற்றி ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Next Story