லண்டனில் இருந்து திரும்பிய நடிகர் வடிவேலுக்கு கொரோனா ஒமைக்ரான் பாதிப்பா?
லண்டனில் இருந்து திரும்பிய நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு மீது சினிமாவில் நடிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு, தற்போது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த படத்தை சுராஜ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புக்காக வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினர் சில நாட்களுக்கு முன்பு லண்டன் சென்றனர்.
தற்போது, அங்கு படப்பிடிப்பை முடித்து விட்டு வடிவேல் நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். அப்போது மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வடிவேலுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஒமைக்ரான் பாதிப்பா?
இதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தேவையான சிகிச்சைகளை டாக்டர்கள் அளித்து வருகின்றனர்.
இந்தநிலையில், லண்டன் சென்று திரும்பிய நடிகர் வடிவேலுக்கு ஏற்பட்ட தொற்று, ஒமைக்ரான் பாதிப்பாக இருக்குமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரது மாதிரிகள் சென்னையில் உள்ள டெக்பாத் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில், அவருக்கு எஸ்-ஜீன் குறைபாடு இருப்பதாக, அதாவது ஒமைக்ரான் ஆரம்ப நிலை அறிகுறி இருப்பதாக தெரியவந்துள்ளது.
பெங்களூரு சோதனை மையம்
மேலும், அது ஒமைக்ரான் பாதிப்பா என்பதை உறுதி செய்ய, அவரது மாதிரி பெங்களூருவில் உள்ள மத்திய அரசின் மரபணு பகுப்பாய்வு மையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பிய நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். நடிகர்கள் அர்ஜூன், விக்ரம் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நடிகர்கள் தொடர்ந்து கொரோனா தொற்றில் சிக்குவது, ரசிகர்களையும், திரைத்துறையினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மேலும் ஒருவருக்கு ‘எஸ் ஜீன்’ குறைபாடு
இதேபோல், அதே விமானத்தில் வந்த மற்றொரு ஆண் பயணி ஒருவருக்கும் விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கும் எஸ்-ஜீன் குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, இவரது மாதிரியும் பெங்களூருவில் உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story