பராமரிப்பு பணி: குருவாயூர், வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர், வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளது.
* சென்னை எழும்பூர்-குருவாயூர் (வண்டி எண்:16127) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற டிசம்பர் மாதம் 26, 27, 28, 29, 31-ந்தேதி மற்றும் ஜனவரி மாதம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10-ந்தேதிகளில் விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும்.
* அஜ்மீர்-ராமேசுவரம் (20973) இடையே இயக்கப்படும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயில் டிசம்பர் மாதம் 25-ந்தேதி (இன்று) மற்றும் ஜனவரி மாதம் 1, 8-ந்தேதிகளில் விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும்.
* பிகானேர்-மதுரை (22632) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் டிசம்பர் மாதம் 26-ந்தேதி (நாளை) மற்றும் ஜனவரி மாதம் 2-ந்தேதிகளில் விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும்.
* மதுரை-சென்னை எழும்பூர் (12636) இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற டிசம்பர் மாதம் 30, 31-ந்தேதி மற்றும் ஜனவரி மாதம் 6-ந்தேதிகளில் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story