சத்துணவில் கெட்டுப்போன முட்டைகள் இருந்த விவகாரம் - 3 பேர் பணியிடை நீக்கம்
பள்ளியில் வழங்கப்படும் சத்துணவில் கெட்டுப்போன முட்டைகள் இருந்த விவகாரத்தில் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கரூர்,
கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை அடுத்த நாகனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு சத்துணவில் வழங்கப்படும் முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாக நேற்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வந்த தகவலின் அடிப்படையில் கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் இன்று சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அங்குள்ள உணவு பொருட்கள் மற்றும் இருப்பு உள்ள முட்டைகளின் தரம் ஆகியவை குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைத்து உணவு பொருட்களும் நல்ல நிலையில் உள்ளது என்றும், முட்டைகள் தண்ணீரில் இட்டு பரிசோதிக்கப்பட்டதாகவும் அவை அனைத்தும் நல்ல நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும் கடந்த வாரம் வாங்கப்பட்ட முட்டைகளை உரிய காலத்தில் அளிக்காமல், கெட்டுப்போன முட்டைகளை பள்ளியில் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் தேன்மொழி, சமையல் பணியாளர் லட்சுமி மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியை தனலட்சுமி ஆகியோரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story