மணிமுத்தாறு சிறப்பு காவல் படை போலீஸ் திடீர் மரணம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 27 Dec 2021 1:55 PM IST (Updated: 27 Dec 2021 1:55 PM IST)
t-max-icont-min-icon

மணிமுத்தாறு சிறப்பு காவல் படை காவலர் சுரேஷ் என்பவர் திடீரென மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அம்பை,

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நீராது மகன் சுரேஷ் (33)இவர் மணிமுத்தாறு சிறப்பு காவல் படை 9 ம் அணியில் பயிற்சி காவலராக இருந்து வருகிறார். இவரது மனைவி ஜோதி  நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில் நேற்று  வீட்டில் இருந்த சுரேஷுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தால் உடனே உறவினர்கள் அம்பை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே காவலர் சுரேஷ் உயிரிழந்தார்.

இது குறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story