அரையாண்டு விடுமுறையில் பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை
அரையாண்டு விடுமுறையில் பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
அரையாண்டு விடுமுறையில் பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் டிசம்பர் 25 முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சில தனியார் பள்ளிகள் விடுமுறை நாள்களிலும் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருவதாக தமிழக அரசுக்கு புகார் வந்துள்ளது.இதையடுத்து, ஜனவரி 2-ஆம் தேதி வரை பள்ளிகளை திறக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
Related Tags :
Next Story