மதுரையில் ‘ஹெலிகாப்டர்’ சுற்றுலா நடத்திய நிறுவனங்களுக்கு ரூ.4¼ லட்சம் வரி


மதுரையில் ‘ஹெலிகாப்டர்’ சுற்றுலா நடத்திய நிறுவனங்களுக்கு ரூ.4¼ லட்சம் வரி
x
தினத்தந்தி 27 Dec 2021 9:12 PM GMT (Updated: 2021-12-28T02:42:18+05:30)

மதுரையில் ‘ஹெலிகாப்டர்’ சுற்றுலா நடத்திய நிறுவனங்களுக்கு ரூ.4¼ லட்சம் வரி.

சென்னை,

மதுரை நுண்ணறிவு பிரிவு இணை கமிஷனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மதுரையில் 2 தனியார் நிறுவனங்கள் பொதுமக்களுக்கான ஹெலிகாப்டர் சர்வீஸ் தொடங்கியது. இந்த 2 நிறுவனங்களும் முன்பதிவு இன்றியும், உரிய ஆவணங்கள் இன்றியும் வணிகம் செய்வது தெரியவந்தது. அதனடிப்படையில் கடந்த 25-ந் தேதி அன்று நேரில் சென்று ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின்போது தகுந்த ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. எனவே ஜி.எஸ்.டி. வரியாக சுமார் ரூ.4.25 லட்சம் வரி விதிக்கப்பட்டு அதனை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story