தி.மு.க.வை மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை - சசிகலா அறிக்கை


தி.மு.க.வை மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை - சசிகலா அறிக்கை
x
தினத்தந்தி 28 Dec 2021 3:28 AM IST (Updated: 28 Dec 2021 3:28 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆர். நினைவிடம் செல்ல தனக்கு அனுமதி மறுத்துள்ள நிலையில், தி.மு.க.வை மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று சசிகலா கூறியுள்ளார்.

சென்னை,

எம்.ஜி.ஆரின் நினைவு நாளில், நான் தொண்டர்களோடு எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்த இருந்த நிலையில், திடீரென்று 23-ந்தேதி சென்னை காவல்துறை ஆணையாளரிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடுப்பதற்காக எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

காவல்துறையினரின் ஆணைக்கு மதிப்பளித்து, கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து, அலுவலக வளாகத்திலே அஞ்சலி செலுத்தினோம்.

புறக்கணிக்கும் காலம்

அதே நாளில் தமிழக முதல்-அமைச்சரே பொது இடத்தில் கூட்டம் சேர்த்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை தொலைக்காட்சிகளில் பார்க்க முடிந்தது. அதே போல், கோவையில் ஆளுங்கட்சியின் சார்பாக பொதுக்கூட்டம் என்ற பெயரில் ஏராளமானவர்களை ஒரே இடத்தில் கூட்டம் சேர்த்து எந்தவித கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல், அவர்களுடைய கட்சி சார்ந்த நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர். ஆகவே, இதுபோன்ற ஆளுங்கட்சியினரின் செயல்பாடுகள் மட்டும் தமிழக காவல்துறையினரின் கண்களில் படாமல் போய் விடுகிறதா?.

ஓமைக்ரான் மெரினாவை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் பரவக்கூடிய ஒரு வைரசா? அண்ணாசாலை மற்றும் கோவை கொடிசியா மைதானம் போன்ற பகுதிகளில் பரவாதா? என்று மக்கள், அடுக்கடுக்கான கேள்விகளை கேட்கிறார்கள்.

தமிழக மக்கள் தி.மு.க.வை முற்றிலுமாக புறக்கணிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story