புதுக்கோட்டை அருகே 10-ம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு


புதுக்கோட்டை அருகே 10-ம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 28 Dec 2021 3:44 PM IST (Updated: 28 Dec 2021 3:44 PM IST)
t-max-icont-min-icon

10-ம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரர் சிற்பம் புதுக்கோட்டை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் இறையூர் கிராமப்பகுதியிலிருந்து முத்துக்காடு செல்லும் சாலையின் ஓரமாக மகாவீரர் சமண சிற்பத்தினை பாரதிதாசன் பல்கலைக்கழக முதுகலை வரலாறு மாணவர்கள் கண்டெடுத்தனர். 

தொடர்ந்து தொல்லியல் ஆய்வு கழகத்தினர் ஆய்வு மேற்கொண்டதில் கழுமரம், லிங்கம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. மகாவீரர் சிற்பம் 10-ம் நூற்றாண்டை சேர்ந்தது எனக் கூறப்படுகிறது.

Next Story