குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை கண்காணிக்க செல்போன் செயலி அறிமுகம்


குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை கண்காணிக்க செல்போன் செயலி அறிமுகம்
x
தினத்தந்தி 29 Dec 2021 12:27 AM IST (Updated: 29 Dec 2021 12:27 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை கண்காணிக்க செல்போன் செயலி அறிமுகம் பொது சுகாதாரத்துறை தகவல்.

சென்னை,

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுவதை கண்காணிப்பதற்காக பிரத்யேக சிறப்பு செல்போன் செயலியை பொது சுகாதாரத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்ட தகவல்கள் மட்டுமல்லாமல், விடுபட்டவர்கள் விவரங்களையும் திரட்டி அதுதொடர்பான தரவுகளையும் அந்த செயலி மூலம் தொகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தடுப்பூசி திட்டத்தில் பங்கெடுக்கும் அலுவலர்களுக்கு அந்த செயலியைக் கையாளுவது குறித்த பயிலரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், இணை இயக்குனர் டாக்டர் வினய் குமார் உள்ளிட்டோர் அதில் பங்கேற்று செயலியின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர். இதுகுறித்து பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- கடந்த 1985-ம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் வாயிலாக ஆண்டுதோறும் 10.11 லட்சம் பெண்களுக்கும், 9.23 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 12 ஆயிரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், நகர்ப்புற சுகாதார மையங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அந்த நடவடிக்கைகளை இன்னும் ஆக்கப்பூர்வமாக செல்போன் வாயிலாக கண்காணிக்க சிறப்பு செயலி 2.0 உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வழக்கமான தடுப்பூசிகள், கொரோனா தடுப்பூசிகள், ‘மிஷன் இந்திரதனுஷ்’ திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்த இயலும். தடுப்பூசி முகாம்களை மட்டுமல்லாது வீடுதோறும் தடுப்பூசி வழங்குவதை உறுதிப்படுத்த முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story