முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருப்பத்தூரில் பதுங்கலா? 2 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருப்பத்தூர் பகுதியில் பதுங்கி இருக்கிறாரா? என்பது குறித்து விசாரணை நடத்த அ.தி.மு.க.வினர் 2 பேரை தனிப்படையினர் அழைத்து சென்றனர்.
திருப்பத்தூர்,
அ.தி.மு.க.வை. சேர்ந்த முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்வேறு நபர்களிடம் வேலை வாங்கித்தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் அவரை பிடிக்க 8 தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருப்பத்தூர் மாவட்டத்தில் பதுங்கி இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டு தனிப்படையினர் ஜோலார்பேட்டை மற்றும் நாட்டறம்பள்ளி பகுதியில் கண்காணித்து வந்தனர்.
2 பேரிடம் விசாரணை
அதைத்தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்ததாக ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியை சேர்ந்த பாசறை இளைஞர் அணி செயலாளர் ஏழுமலை மற்றும் நாட்டறம்பள்ளி அருகே புதுப்பேட்டை அக்ராவரம் பகுதியை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் விக்கி என்கிற விக்னேஸ்வரன் ஆகிய இருவரையும், நேற்று காலை திருநெல்வேலி மாவட்ட தனிப்படையினர் விசாரணைக்காக அழைத்து சென்று உள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story