சென்னையில் இடிக்கப்பட வேண்டிய - குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை மதிப்பீடு செய்ய 5 நிபுணர் குழுக்கள்
சென்னையில் இடிக்கப்பட வேண்டிய குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை மதிப்பீடு செய்ய 5 நிபுணர் குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,
சென்னை திருவொற்றியூரில் நேற்று முன்தினம் குடிசை மாற்று வாரிய கட்டிடம் இடிந்து விழுந்து 24 வீடுகள் தரைமட்டம் ஆயின. இந்த நிலையில் தமிழ்நாடு நகர்ப்புற வசிப்பிட மேம்பாட்டு வாரியத்தின் (குடிசை மாற்று வாரியம்) மேலாண்மை இயக்குநர் எம்.கோவிந்தராவ் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னையில் 123 குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றில் 61 திட்டங்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலானவையாகும். 61 திட்டங்களில் அதாவது 22 ஆயிரத்து 271 குடியிருப்புகளில் பாதிப்பு குறித்து ஏற்கனவே மதிப்பீடு செய்யப்பட்டது. அவற்றில் 20 ஆயிரத்து 453 குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 62 திட்டங்களுக்கு உட்பட்ட 17 ஆயிரத்து 734 குடியிருப்புகள், 27.11.2021 அன்று அமைக்கப்பட்ட தொழில்நுட்ப குழுவினால் மதிப்பீடு செய்யப்படும்.
5 நிபுணர் குழுக்கள்
திருவொற்றியூர் குடியிருப்பில் 27-ந் தேதி கட்டிடம் இடிந்து விழுந்தது. அங்கிருந்த ஒரு பிளாக்கில் 24 குடியிருப்புகள் இடிந்து விழுந்தன. எனவே மீதமுள்ள 62 திட்டங்களுக்கு உட்பட்ட 17 ஆயிரத்து 734 குடியிருப்புகளை உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியமாகிறது.
அதன்படி, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசர நிலை கருதி, தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுக்களை வாரியம் நியமிக்கிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 குழுக்களிலும் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர் இருப்பார்.
31-ந் தேதி அறிக்கை
இந்த குழுக்கள் தங்களின் ஆய்வு பணியை முடித்து 31-ந் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அதோடு, தினமும் மாலை 5 மணிக்குள் தலைமையகத்திற்கு அன்றைய பணிகள் பற்றிய நிலவரத்தை தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
எத்தனை குடியிருப்புகளை அந்த குழுக்கள் ஆய்வு செய்ய வேண்டும்? என்பது அவர்களுக்கு பிரித்தளிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு குழுவிற்கும் அவர்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் குடியிருப்புகள் கட்டப்பட்ட ஆண்டு, அந்த கட்டிடத்தின் வயது உள்ளிட்ட விவரங்கள் அளிக்கப்பட்டு உள்ளன. பெரும்பாலான கட்டிடங்கள் 40 முதல் 49 வயதைக் கடந்தவையாக உள்ளன.
5 குழுக்கள் ஆய்வு
முதல் குழுவின் ஆய்வுக்கு உட்பட்டுள்ள 14 திட்டங்களில் 8 திட்டங்களில் உள்ள கட்டிடங்கள் 40 முதல் 49 வயதிற்கு உட்பட்டவையாக உள்ளன. டிரஸ்ட்புரம் திட்டத்தில் உள்ள கட்டிடத்தின் வயது 56 ஆண்டுகளாகும்.
2-வது குழுவின் ஆய்வுக்கு உட்பட்டுள்ள 13 திட்டங்களில் 7 திட்டங்களில் உள்ள கட்டிடங்கள் 40 முதல் 49 வயதிற்கு உட்பட்டவையாக உள்ளன. எம்.டி.பி. (ஆர்) திட்டத்தின் குடியிருப்பில் உள்ள கட்டிடத்தின் வயது 52 ஆகும்.
3-வது குழுவின் ஆய்வுக்கு உட்பட்டுள்ள 14 திட்டங்களில் 7 திட்டங்களில் உள்ள கட்டிடங்கள் 40 முதல் 49 வயதிற்கு உட்பட்டவையாக உள்ளன. இந்திராநகர் (முதல் பேஸ்), சாஸ்திரிநகர் ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்பு திட்டத்தின் கட்டிடத்தின் வயது 51 ஆண்டுகளாக உள்ளது.
4-வது குழுவின் ஆய்வுக்கு உட்பட்டுள்ள 12 திட்டங்களில் 6 திட்டங்களில் உள்ள கட்டிடங்கள் 40 முதல் 49 வயதிற்கு உட்பட்டவையாக உள்ளன. இதில் அதிகபட்சமாக பிருந்தாவன் நகர் திட்டத்தின் குடியிருப்பில் உள்ள கட்டிடத்தின் வயது 48 ஆகும்.
5-வது குழுவின் ஆய்வுக்கு உட்பட்டுள்ள 8 திட்டங்களில் 2 திட்டங்களில் உள்ள கட்டிடங்கள் 40 முதல் 42 வயதிற்கு உட்பட்டவையாக உள்ளன. இதில் அதிகபட்சமாக நாகூரான் தோட்டம் திட்டத்தின் குடியிருப்பில் உள்ள கட்டிடத்தின் வயது 42 ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story