கடற்கரை சாலைகளில் செல்ல தடை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலைகளில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவிவரும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கவும் தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. மேலும், பண்டிகை காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடங்களில் வெளியில் ஒன்று கூடுவதால், கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
கட்டுப்பாடுகள்
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், வருகிற 31-ந் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
* 2022-ம் ஆண்டு புத்தாண்டு பிறப்பதையொட்டி, 31-ந் தேதியன்று இரவு சென்னை பொதுமக்கள் வெளியிடங்களில் ஒன்று கூடவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். சென்னையில் அனைத்து மக்களும் புத்தாண்டை கொண்டாடும்பட்சத்தில், தற்போதைய கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் சூழ்நிலையை கருத்தில்கொண்டு, கொரோனா நடத்தை விதிமுறைகளை கடைபிடித்து, மற்றவர்களின் உணர்வுகள் புண்படாத வகையில் கொண்டாடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வாகனங்களுக்கு தடை
* பொதுமக்கள், மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, நீலாங்கரை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் ஒன்றுகூட வேண்டாம்.
* 31-ந் தேதியன்று இரவு 9 மணி முதல் சென்னையில் மெரினா கடற்கரை, போர் நினைவுச்சின்னம் முதல் காந்தி சிலை வரையிலான காமராஜர் சாலை மற்றும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை ஒட்டிய சாலையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்படும்.
புத்தாண்டு வர்த்தக நிகழ்ச்சிகள்...
* கடற்கரையை ஒட்டிய சாலைகளான காமராஜர் சாலை, ஆர்.கே.சாலை, ராஜாஜி சாலை, அண்ணா சாலை, ஜி.எஸ்.டி.சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்களை நிறுத்தி புத்தாண்டு கொண்டாட்டங்களை கொண்டாடக்கூடாது.
* ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள், மாநாட்டு அரங்குகள், கிளப்புகள் போன்றவற்றில் புத்தாண்டு வர்த்தக ரீதியாக நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.
அடுக்குமாடி குடியிருப்புகள்
* அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் வில்லா ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஒன்றுகூடி நடத்தக்கூடாது.
* ஓட்டல்கள் மற்றும் தங்கும் வசதியுடைய உணவகங்கள் தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
* ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனரா? என ஓட்டல் நிர்வாகம் கண்காணித்து உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
அனுமதி இல்லை
* அனைத்து ஓட்டல்களிலும், கேளிக்கை விடுதிகளிலும், பண்ணை வீடுகளிலும், பொது இடங்களிலும் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், டி.ஜே. இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை.
* கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களிலும், சம்பந்தப்பட்ட நிர்வாகி, அதிகாரிகள், தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்றுகின்றனரா? என கண்காணிக்கவேண்டும். மேலும், அங்கு வரும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தி, அனைத்து நுழைவு வாயில்களிலும் அகச்சிவப்பு (இன்ப்ராரெட்) மற்றும் உடல் வெப்ப பரிசோதனை கருவிகளை கொண்டு பரிசோதித்து அனுமதிக்க வேண்டும்.
‘பைக்ரேஸ்’ கண்காணிப்பு
சென்னை பெருநகர காவல்துறையினர் 31-ந் தேதியன்று இரவு முக்கிய இடங்களில் வாகன சோதனைச்சாவடிகள் அமைத்து, பொதுமக்கள் கூடும் இடங்களை கண்காணித்தும், அனைத்து முக்கிய இடங்களில் ரோந்து சென்றும், கன்னியமற்ற மற்றும் அநாகரிகமான செயல்களிலும் ஈடுபடுவோர், ‘பைக்ரேஸ்' மற்றும் அதிவேகமாக வானங்களை இயக்குபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆகவே, கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை கருத்தில் கொண்டு களியாட்டங்களில் ஈடுபட்டு தேவையற்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் தவிர்த்து, சென்னை காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
சென்னை மாநகர போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story