நந்தம்பாக்கம் கோதண்டராமர் கோவில் நிலத்தை மீட்க அதிகாரிகள் கூட்டத்தை 6 வாரத்துக்குள் நடத்த வேண்டும்
நந்தம்பாக்கம் கோதண்டராமர் கோவில் நிலத்தை மீட்க அதிகாரிகளின் கூட்டத்தை 6 வாரத்துக்குள் நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
திருத்தொண்டர்கள் சபை என்ற அமைப்பின் நிறுவனர் ஆ.ராதாகிருஷ்ணன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சென்னை போரூரை அடுத்த நந்தம்பாக்கத்தில் கோதண்டராமர் கோவிலுக்கு சொந்தமாக 150 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் உள்ளன. அவற்றை போலி ஆவணங்கள் மூலம் தங்கள் பெயருக்கு மாற்றும் வகையில் நில அபகரிப்பாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதை தடுக்கக்கோரி மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.
சரிபார்ப்பு
அப்போது, மனுதாரரின் புகாரின் அடிப்படையில் வருவாய்த்துறை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. நில உரிமையாளர் என உரிமை கோருவோரின் ஆவணங்களும் சரிபார்க்கப்படுகின்றன. இந்த பணிகளை முடித்து கோவில் நிலங்களை மீட்பதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கோவில் நில ஆவணங்களை ஆராய்ந்து, நிலத்தை அளந்து மீட்பதற்கும், அபகரிப்பாளர்கள் மீது சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பதற்கும் தமிழக அரசின் வருவாய்த்துறை, அறநிலையத்துறை, உள்ளாட்சித்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
அதிகாரிகள் கூட்டம்
இதுதொடர்பாக உரிய அதிகாரிகள் அடங்கிய கூட்டத்தை 6 வாரங்களில் கூட்ட வேண்டும். அதில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் கோவில் நிலத்தை மீட்பதற்கான சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த வழக்கை முடித்துவைக்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Related Tags :
Next Story