ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக்கு எதிர்ப்பு: 30 பேர் குண்டுகட்டாக கைது


ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக்கு எதிர்ப்பு: 30 பேர் குண்டுகட்டாக கைது
x
தினத்தந்தி 30 Dec 2021 7:27 AM GMT (Updated: 30 Dec 2021 7:27 AM GMT)

கோவையில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளியை முற்றுகையிட்ட 30 பேர் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்.

கோவை,

கோவையில் உள்ள கல்வி நிலையங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சாகா பயிற்சியை நடத்தி வருகிறது. இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து கல்வி நிலையங்களில் இதுபோன்ற பயிற்சியை நடத்தக்கூடாது என்று கூறி வந்தனர். மேலும் இதுகுறித்து போலீசாரிடம் புகார் மனு அளித்தனர்.

இந்தநிலையில் கோவை விளாங்குறிச்சி சாலையில் அமைந்து உள்ள தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் சாகா பயிற்சி இன்று காலை நடைபெற்றது. இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதனால் பள்ளியின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

ஆனால் அதையும் மீறி பள்ளி முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அதன் செயலாளர் கு.ராமகிருஷ்னணன் தலைமையில் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. உடனே அவர்கள் சாலையில் படுத்துகொண்டு கோஷங்களை எழுப்பினர். இதில் 30 பேரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story