ஏற்காட்டில் கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் - வீடியோ
ஏற்காட்டில் கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்காடு,
ஏற்காட்டில் நேற்று இரவு முதல் கடும் குளிர் நிலவி வருகிறது. பனி மூட்டம் காரணமாக இன்று காலை 7 மணி ஆகியும் விடியல் ஏற்படவில்லை.
மேலும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சாலையில் ஊர்ந்து செல்லும் நிலை
ஏற்பட்டது. கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் காரணமாக பொதுமக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடக்கின்றனர். ஏற்காட்டில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.
ஏற்காட்டில் கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!#Yercaud#Winter#Hills#Climate#Cold#Fog#Salem#Public#trending#Dailythanthi#dtpic.twitter.com/jslKEmKIgZ
— DailyThanthi (@dinathanthi) December 31, 2021
முக்கிய வேலைக்காக செல்லும் ஒரு சிலர் மட்டும் சொட்டர் குல்லா அணிந்து குளிரில் நடுங்கிய படி சென்று வருகின்றனர்.
Related Tags :
Next Story