மதுரையில் இருந்து டெல்லிக்கு விமான சேவை தற்காலிக ரத்து


மதுரையில் இருந்து டெல்லிக்கு விமான சேவை தற்காலிக ரத்து
x
தினத்தந்தி 21 Jan 2022 10:29 AM IST (Updated: 21 Jan 2022 10:29 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் இருந்து டெல்லிக்கு விமான சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுரை,

கொரோனா பரவலால் மத்திய அரசு விமான போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

இந்தநிலையில் மதுரையிலிருந்து டெல்லிக்கு பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்பட்டு வந்த 2 விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 

இதேபோல மதுரையிலிருந்து ஐதராபாத் மற்றும் பெங்களூருவுக்கு காலை, மாலை என விமான சேவைகள் இருந்த நிலையில் அவற்றில் இரவு நேர சேவை மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 More update

Next Story