மு.க.ஸ்டாலினுடன், ஐ.ஐ.டி. நிர்வாகிகள் திடீர் சந்திப்பு ஏன்? ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி விளக்கம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகிகள் நேற்று திடீரென்று சந்தித்து பேசினர். இந்த திடீர் சந்திப்பு ஏன்? என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி விளக்கம் அளித்தார்.
சென்னை,
சென்னை ஐ.ஐ.டி. இயக்குனராக காமகோடி சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி, முதல்வர் கோஷி வர்கீஸ், பதிவாளர் ஜேன் பிரசாத், பி.எஸ்சி. பட்டப்படிப்பு ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் முத்து விஜயன் ஆகிய நிர்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினர்.
இந்த திடீர் சந்திப்புக்கான காரணம் குறித்து சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி நேற்று நிருபர்களுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆன்லைனில் பி.எஸ்சி. படிப்பு
சென்னை ஐ.ஐ.டி., கிராமப்புற தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு என்ன செய்யப்போகிறது? என்பது பற்றி முதல்-அமைச்சருடன் பேசினோம். இந்த சந்திப்பு மிகவும் திருப்திகரமாக இருந்தது. அந்தவகையில் தமிழக கிராமப்புற மாணவர்களுக்காக ஆன்லைனில் பி.எஸ்சி. பட்டப்படிப்பு ஒன்றை ஆரம்பித்து இருக்கிறோம்.
ஆவண அறிவியல், செயற்கை நுண்ணறிவு போன்ற பிரிவுகளில் இந்த படிப்புக்கு வேலைவாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஏற்கனவே இந்தப் படிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த 2,500 மாணவர்கள் படித்து வருகிறார்கள். அதில் 330 பேர் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களாக இருந்து வருகின்றனர். இதனை 1,000 என்ற அளவில் மாற்றவேண்டும் என்பதுதான் சென்னை ஐ.ஐ.டி.யின் குறிக்கோளாக இருக்கிறது.
உதவித்தொகையுடன் படிக்கலாம்
அதன் ஒரு முயற்சியாகத்தான் தற்போது முதல்-அமைச்சரை சந்தித்து அதுபற்றி பேசினோம். அரசு பள்ளி மாணவர்கள் சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்க வாருங்கள் என்று அழைக் கும் விதமாகவும், அவர்களுடைய திறமையை மேலும் மேம்படுத்தும் விதமாகவும் இந்த படிப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. மற்ற படிப்புகளை படித்து கொண்டேகூட இந்த பட்டப்படிப்பை படிக்கலாம்.
இந்த படிப்பில் சேருவதற்கு முதலில் தகுதித்தேர்வு நடத்தப்படும். இது ஏதோ தரவரிசைப்பட்டியல்படி சேர்ப்பது கிடையாது. இந்தத் தகுதித்தேர்வில் ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்ணை மாணவர்கள் எடுத்தாலே இந்த படிப்பில் சேரமுடியும். படிப்புக்கு தேவையான கட்டணத்திலும் மாணவர்களுக்கு 75 சதவீதம் வரை உதவித்தொகை கிடைக்கும். மாணவிகளை பொறுத்தவரையில், 100 சதவீதம் வரை உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
வேலைவாய்ப்புக்கான முழு தகுதி
இதற்கான தகுதித்தேர்வு மே மாதத்தில் நடைபெற இருக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான முழு விவரங்கள் https://onlinedegree.iitm.ac.in என்ற இணையதள முகவரியில் உள்ளது. தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் விதமாக 4 வார கால பயிற்சி வகுப்புகளும், அதற்கு தேவையான படிப்பு உபகரணங்களும் சென்னை ஐ.ஐ.டி. ஏற்பாடு செய்கிறது.
3 வருட படிப்பாக இருக்கும் இதை இடைவெளிவிட்டு, மாணவர்களுக்கு ஏற்றவாறு படிப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டப்படிப்பை மாணவர்கள் படித்து முடிக்கும்போது வேலைவாய்ப்புக்கான முழு தகுதியை அவர்கள் பெறுவார்கள். இதேபோல் கிராமப்புற மாணவர்களின் அறிவு திறனை மேம்படுத்த கிராமப்புற தொழில்நுட்ப மையமும் கொண்டுவரப்பட இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்த்தாய் வாழ்த்து
சமீபத்தில் ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது தொடர்பாக கேள்வி கேட்டதற்கு, ‘இனி அதுபோன்ற தவறு நடக்காது.' என்றார். இதேபோல் சாதி ரீதியாக சில பாகுபாடுகள் சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த சில காலங்களாக நடந்து வருவதாக புகார்கள் எழுகிறதே என்று கேட்டதற்கு, ‘அது போன்ற புகார்கள் வந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். சாதி ரீதியான பாகுபாடு சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இருக்காது' என்று கூறினார்.

Related Tags :
Next Story