சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரியை நியமிக்க முடிவு


சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரியை நியமிக்க முடிவு
x
தினத்தந்தி 1 Feb 2022 4:41 AM IST (Updated: 1 Feb 2022 4:41 AM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரியை நியமிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்துள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருப்பவர் முனீஸ்வர்நாத் பண்டாரி. அலகாபாத் மூத்த நீதிபதியான முனீஸ்வர்நாத் பண்டாரி, சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதவி ஏற்றார்.

இந்த நிலையில், அவரை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு முடிவு செய்துள்ளது. இதுசம்பந்தமாக, சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழுவின் கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ந்தேதி மற்றும் கடந்த ஐனவரி 29-ந்தேதி நடந்தது. அப்போது இந்த முடிவை நீதிபதிகள் எடுத்துள்ளனர்.

பரிந்துரை

பின்னர், இதுதொடர்பான பரிந்துரையை மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பி உள்ளனர். எனவே விரைவில் முனீஸ்வர் நாத் பண்டாரி, ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில், 1960-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி பிறந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, அம்மாநில ஐகோர்ட்டு நீதிபதியாக 2007-ம் ஆண்டு பதவி ஏற்றார். பின்னர், கடந்த 2019-ம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து சென்னை ஐகோர்ட்டுக்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story