உயிரிழப்பு 20 ஆக குறைந்தது தமிழகத்தில் 19,280 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் நேற்று 19 ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சென்னை,
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 22 ஆயிரத்து 105 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 11 ஆயிரத்து 481 ஆண்கள், 7 ஆயிரத்து 799 பெண்கள் என மொத்தம் 19 ஆயிரத்து 280 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 897 பேரும், கோவையில் 2 ஆயிரத்து 456 பேரும், செங்கல்பட்டில் ஆயிரத்து 430 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக வேலூரில் 72 பேரும், பெரம்பலூரில் 40 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று வெளிநாட்டில் இருந்து வந்த 4 பேர் உட்பட 12 வயதுக்கு உட்பட்ட 458 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 2 ஆயிரத்து 989 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்பத்திரியில்...
தமிழகத்தில் இதுவரை 33 லட்சத்து 45 ஆயிரத்து 220 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 24 ஆயிரத்து 105 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 4 லட்சத்து 87 ஆயிரத்து 580 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 8 ஆயிரத்து 52 பேர் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3 ஆயிரத்து 726 பேர் ஆக்சிஜன் வசதி படுக்கை கொண்ட வார்டுகளிலும், ஆயிரத்து 30 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
20 பேர் உயிரிழப்பு
கொரோனாவுக்கு தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 13 பேரும், தனியார் ஆஸ்பத்திரிகளில் 7 பேரும் என 20 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக சென்னையில் 6 பேரும், கோவையில் 3 பேரும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருச்சியில் தலா இருவரும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடியில் தலா ஒருவரும் என 10 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 564 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 25 ஆயிரத்து 56 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 5 ஆயிரத்து 75 பேரும், கோவையில் 3 ஆயிரத்து 284 பேரும், செங்கல்பட்டில் 2 ஆயிரத்து 218 பேரும் அடங்குவர். இதுவரையில் 31 லட்சத்து 9 ஆயிரத்து 526 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்த 1 லட்சத்து 98 ஆயிரத்து 130 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story