முல்லை பெரியாறு அணை விவகாரம்; தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமைச்சர் துரைமுருகன்
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பை மறுஆய்வு செய்ய தற்போது அவசியமில்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சென்னை,
முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு பணியை மேற்பார்வை குழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிட கோரிய மனு மற்றும் தமிழகம்-கேரளா இடையிலான முல்லை பெரியாறு அணையின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட கோரிய மனு ஆகியற்றை இணைத்து உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த விசாரணையின் போது, முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டிய அம்சங்களை கண்டறிந்து, அவை குறித்து எழுத்துப்பூர்வமாக பிப்ரவரி 4 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய தமிழகம், கேரளம், மனுதாரர்கள் மற்றும் இடையீட்டு மனுதாரர்களுக்கு உத்தரவிட்டப்பட்டது.
இந்த நிலையில், முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“முல்லை பெரியாறு அணை பாதுகாப்பை மறுஆய்வு செய்ய தற்போது அவசியமில்லை.
மத்திய நீர்வள குழுமத்தின் நிலை அறிக்கைக்கான தமிழக அரசின் பதில் மனு, வரும் 4-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்.
தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தகுந்த முறையில் எடுத்துரைப்போம்.
தமிழ்நாட்டின் உரிமைகளையும் விவசாயிகள் நலனையும் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story