இலங்கை தமிழர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கக்கோரிய வழக்கு தள்ளுபடி


இலங்கை தமிழர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கக்கோரிய வழக்கு தள்ளுபடி
x
தினத்தந்தி 2 Feb 2022 2:48 AM IST (Updated: 2 Feb 2022 2:48 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை தமிழர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கக்கோரிய வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ராமு மணிவண்ணன். இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அரசு வழங்கியது.

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களுக்கு வெளியில் வசிக்கும் 32 ஆயிரத்து 242 இலங்கை தமிழர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘மாநிலம் முழுவதும் உள்ள 108 முகாம்களில் உள்ள 94 ஆயிரத்து 69 பேருக்கும் கொரோனா ஊரடங்கின்போது நிவாரண நிதி வழங்கப்பட்டது. எனவே, அவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘கொரோனா உதவி அனைவருக்கும் வழங்கப்பட்டாலும், பொங்கல் பரிசு தொகுப்பை அனைவருக்கும் வழங்கும்படி அரசை கட்டாயப்படுத்த முடியாது’ என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story