சென்னை: நூதன முறையில் தங்கம் கடத்திய 3 பெண்கள்

சென்னையில் நூதன முறையில் கடத்திய ரூ.22.73 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,
இலங்கையின் கொழும்புவில் இருந்து விமானம் ஒன்று சென்னைக்கு வந்தது. அதில் வந்த மூன்று பெண் பயணியர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வெளியேற முயன்றனர். அவர்களை இடைமறித்து சுங்க துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் தலையில் மாட்டியிருந்த விக் எனும் செயற்கை தலைமுடி மற்றும் உள்ளாடைக்குள் தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை வெளியே எடுத்து மதிப்பிட்டதில் ரூ.22.73 லட்சம் மதிப்பிலான 525 கிராம் தங்கம் இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story