வகுப்பறைக்குள் புகுந்து கல்லூரி மாணவியை அடித்துக்கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
ஒருதலைக்காதலால் கல்லூரி மாணவியை வகுப்பறைக்குள் புகுந்து கட்டையால் அடித்துக் கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கரூர்,
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்தவர் சோனாலி (வயது 20). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கடந்த 2016-ம் ஆண்டு படித்து வந்தார்.
இதே கல்லூரியில் படித்து வந்த ராமநாதபுரம் மாவட்டம் ஆதிய நேந்தல் பகுதியைச் சேர்ந்த மாணவர் உதயகுமாா் (21) சோனாலியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து தனது காதலை சோனாலியிடம் அவர் தெரிவித்துள்ளார். அதற்கு சோனாலி மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் உதயகுமாரை கல்லூரி நிர்வாகம் கல்லூரியிலிருந்து நீக்கியுள்ளது.
அடித்துக்கொலை
இந்நிலையில் கடந்த 30.8.2016 அன்று உதயகுமார் கல்லூரிக்குள் சென்று சோனாலியை உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்த வழக்கு கரூர் மகிளா கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், நீதிபதி நசீமாபானு தீர்ப்பு வழங்கினார்.
ஆயுள் தண்டனை
அதில் 5 பிரிவின் கீழ் தண்டனை வழங்கப்பட்டது. அதன்படி உதயகுமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் குற்றவாளியிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராதத்தை இறந்த கல்லூரி மாணவியின் தாயாருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் அவர் கூறியிருந்தார்.

Related Tags :
Next Story