நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மும்முரம் அரசியல் கட்சியினர் போட்டிபோட்டு மனு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மனுதாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்ற நிலையில் அரசியல் கட்சியினர் நேற்று தமிழகம் முழுவதும் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சென்னை,
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
பேச்சுவார்த்தை நிறைவு
இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 28-ந்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறார்கள். முக்கிய அரசியல் கட்சிகள் வேட்பாளரை இறுதி செய்யாததால் அதிக அளவில் சுயேச்சைகளே மனு தாக்கல் செய்தனர்.
ஆளும் தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இதில் காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் இடப்பங்கீடு தொடர்பாக இழுபறி ஏற்பட்டது. இதனையடுத்து டெல்லியில் இருந்து அந்த கட்சியின் மேலிட பார்வையாளர் சென்னை வந்து தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து இடப்பங்கீடு ஒருவழியாக முடிவுக்கு வந்தது. தி.மு.க.வில் பேச்சுவார்த்தை நிறைவு பெற்று விட்டது.
தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இதேபோல் கம்யூனிஸ்டு கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டன.
பா.ஜ.க. தனித்து போட்டி
எதிர்க்கட்சியான அ.தி. மு.க. கூட்டணியில் பா.ஜ.க. கணிசமான இடங்களை எதிர்பார்த்து பேச்சுவார்த்தையை தொடங்கியது. சில கட்டங்களாக நீடித்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.
அதற்குள் அ.தி.மு.க. தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. கேட்ட இடங்கள் கிடைக்காத அதிருப்தியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து களம் காண்பதாக அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை அதிரடியாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் பட்டியல் பல கட்டங்களாக வெளியிடப்பட்டது. கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு சில இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவர்களும் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திலேயே களம் காண்கிறார்கள்.
இதேபோல் தனித்து போட்டியிடும் பா.ம.க., தே.மு.தி.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அ.ம.மு.க., சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டன.
நாளை கடைசி நாள்
கிட்டத்தட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்ட நிலையில் வேட்பு மனு தாக்கல் நேற்று களைகட்டியது. கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டபோதும், வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் மேளதாளம் முழங்க வாணவேடிக்கை சகிதம் வந்து மனு தாக்கல் செய்து வருகிறார்கள்.
வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் என்பதால் நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏராளமானோர் குவிந்து வருகிறார்கள்.
ஒரே நாளில் 7,590 பேர் மனு தாக்கல்
அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சிலர் மட்டுமே நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதன்காரணமாக நேற்று முன்தினம் வரை 2,563 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்ததால் நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 7 ஆயிரத்து 590 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 153 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 1,672 பேர் மாநகராட்சி கவுன்சிலர் பதவியிடத்துக்கும், 3,017 பேர் நகராட்சி கவுன்சிலர் பதவியிடத்துக்கும், 5,464 பேர் பேரூராட்சி கவுன்சிலர் பதவியிடத்துக்கும் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் ஆவர்.
சென்னையில் 418 பேர்
சென்னை மாநகராட்சியில் பா.ஜ.க., பா.ம.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க. வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகளே வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர். சிலர் இசை கருவிகளுடன் வார்டு அலுவலகங்களுக்கு வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 175 ஆண்கள், 135 பெண்கள் என மொத்தம் 310 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை சென்னையில் 241 ஆண்கள், 177 பெண்கள் என மொத்தம் 418 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
தாம்பரத்தில் நேற்று 91 பேர் மனு தாக்கல் செய்திருப்பதால் இதுவரை மனு தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது. ஆவடி மாநகராட்சியில் நேற்று 29 பேர் மனு தாக்கல் செய்தனர். இதுவரை அங்கு 40 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதேபோல் மதுரையில் 71 பேரும், சிவகாசியில் 89 பேரும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதேபோல் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மும்முரமாக நடந்தது.
தேர்தல்களம் சூடுபிடிக்கிறது
அரசியல் கட்சியினர் போட்டிபோட்டுக்கொண்டு வேட்பு மனுதாக்கல் செய்து வருவதால் தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடையும் நிலையில், நாளை மறுதினம் (5-ந்தேதி) மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. பின்னர் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இதன்பின்னர் தேர்தல் பிரசாரம் களைகட்ட தொடங்கும். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்தந்த மாவட்ட அமைச்சர்களும், மாவட்டச்செயலாளர்களும் தற்போதே பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.
தலைவர்கள் பிரசாரம்
முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களும், கனிமொழி எம்.பி., தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிக்கு ஆதரவாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பிரசாரம் செய்வார்கள். இதேபோல் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும், பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர்களும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

Related Tags :
Next Story