தமிழகத்தில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் அமைச்சர் வேண்டுகோள்
அண்டை மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கிறது. எனவே தமிழகத்தில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகே உள்ள பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் 600 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அந்தவகையில் திருவேற்காடு பகுதியில் உள்ள பெரியபாளையத்தில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று (நேற்று முன்தினம்) மாலை வரை 5 லட்சத்து 6 ஆயிரத்து 50 பேர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி உடையர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.
அவர்களில் இதுவரை 4 லட்சத்து 17 ஆயிரத்து 908 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். தினந்தோறும் இந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கும். அதேபோல் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட 33 லட்சத்து 46 ஆயிரம் சிறுவர்களில், 26 லட்சத்து 26 ஆயிரத்து 311 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். அதாவது 78.41 சதவீதம் சிறுவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை
சிறுவர்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி ‘கோவேக்சின்’ என்பதால், 28 நாட்கள் கழித்து 2-வது தவணை தடுப்பூசி போடவேண்டியது அவசியமாகிறது. அந்தவகையில் இதுவரை 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டிருப்பதால், 2-வது தவணை தடுப்பூசி செலுத்த பள்ளிகளிலேயே முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 4.77 சதவீதம் சிறுவர்களுக்கு 2 தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் 9 கோடியே 54 லட்சத்து 74 ஆயிரத்து 779 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சதவீதம் அடிப்படையில் பார்க்கும் போது 90.42 சதவீதம் ஆகும். 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 68.97 சதவீதமாக இருக்கிறது.
தமிழகத்தில் 62 லட்சத்து 64 ஆயிரத்து 828 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 96 லட்சத்து 22 ஆயிரத்து 615 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர். இவர்கள் அனைவரும் உடனடியாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.
கொரோனா அதிகரிக்கிறது
கடந்த ஒரு வாரமாக பல்வேறு நாடுகளில் தொற்றின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வந்தநிலையில், திடீரென கடந்த 3 நாட்களாக இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் தொற்றின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் தொற்றின் எண்ணிக்கை மீண்டும் ஏறுமுகமாக இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும், கர்நாடகா, கேரளா போன்ற பக்கத்து மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டு வருவதால் தடுப்பூசி என்பது மிகவும் அவசியமானதாக உணரப்படுகிறது.எனவே, அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். தற்போது டெல்டா, ஒமைக்ரான் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துவதால், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள், தீவிர சிகிச்சை படுக்கைகள் அவசியமாக இருக்கிறது. தற்போது வரை தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் 10 சதவீதமும், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் 7 சதவீதம் அளவுக்கும் என ஒட்டு மொத்தமாக 6 சதவீதம் படுக்கைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. 94 சதவீதம் படுக்கைகள் காலியாக உள்ளது. ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகள் 95 சதவீதம் காலியாக உள்ளது.
உயிரிழப்புகளை தவிர்க்க தடுப்பூசி
பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். உயிரிழப்புகளை தவிர்க்க தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும். வருகிற சனிக்கிழமை 21-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது. இதுவரை 20 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 3 கோடியே 57 லட்சத்து 12 ஆயிரத்து 406 பேர் பயன்பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் தனியார் ஆஸ்பத்திரியில் வாங்கப்பட்ட தடுப்பூசிகள் அனைத்தும் தேக்க நிலையில் இருப்பது உன்மை. அதனால் தான் தமிழகத்தில், சி.எஸ்.ஆர் நிதி மூலம் தமிழக முதல்-அமைச்சர் இலவசமாக தடுப்பூசி செலுத்த வழிவகை செய்தார். அதற்கு பிறகும் கூட தமிழகத்தில் ஒரு சில தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசிகள் தேக்க நிலையில் இருக்கிறது. ஆனாலும், அந்த தடுப்பூசிகள் காலாவதி ஆகிவிட்டதாக என்பதை ஐ.சி.எம்.ஆர் இன்னும் முடிவு செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் கே.ஜெயக்குமார், டி.ஜெ.கோவிந்தராஜன், துரை சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story