சென்னையில் 1,243 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை - ககந்தீப்சிங் பேடி தகவல்
சென்னையில் 1,243 பதற்றமான வாக்குச் சாவடிகள் இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ககந்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்க இருக்கிறது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 30 தொடங்கிய நிலையில், இன்றோடு வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது.
இந்த நிலையில் சென்னையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி ககந்தீப்சிங் பேடி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் போலீசாருடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ககந்தீப்சிங் பேடி, சென்னையில் 1,243 பதற்றமான வாக்குச் சாவடிகள் இருப்பதாக குறிப்பிட்டார்.
தேர்தல் பணிகளில் 27 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்ற உள்ளதாகவும், தேர்தல் அன்று 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க கூட்டமாக செல்லக் கூடாது எனவும், பதற்றமான வாக்குச் சாவடிகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
Related Tags :
Next Story