திண்டுக்கல் அருகே துணிக்கடயில் தீ விபத்து ; ரூ 2 கோடி பொருட்கள் நாசம்
திண்டுக்கல் அருகே துணிக்கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கோபால்பட்டியில் சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பர்னிச்சர் கடை உள்ளது. இங்கு இன்று அதிகாலை திடீரென தீப்பற்றி கொளுந்து விட்டு எரிந்தது.
தகவல் அறிந்து வந்த நத்தம் தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ தீ விபத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன என கூறப்படுகிறது. விபத்திற்கான காரணம் குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story