தாய் தந்தை மகன் தூக்கிட்டு தற்கொலை காரணம் என்ன?


தாய் தந்தை மகன் தூக்கிட்டு தற்கொலை காரணம் என்ன?
x
தினத்தந்தி 4 Feb 2022 3:25 PM IST (Updated: 4 Feb 2022 3:25 PM IST)
t-max-icont-min-icon

ஆவடி அருகே தாய் தந்தை மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை

ஆவடி அருகே கோவில்பதாகை பகுதியை சேர்ந்தவர் முகமது சலீம் (வயது 44). இவர் அசோக் நகரில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சோபியா (37) என்ற மனைவியும், அப்துல் சலீம்(14) என்ற மகனும் உள்ளனர்.

மகன் அப்துல் சலீம் வாய் பேச முடியாமலும் காது கேட்காமலும் இருந்து உள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் முகமது சலீம் தனது சகோதரிக்கு செல்போனில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி வைத்துவிட்டு   மனைவி, மகனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்

சகோதரி சலீனாவுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், எங்கள் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. எங்கள் சொத்துக்கள் அனைத்தும் எனது சகோதரி, சகோதரியின் மகள் இருவருக்கும் சேரும் என்று கூறியிருந்தது.

பின்னர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story