நடிகர் சூரி கொடுத்த பண மோசடி புகார்: முன்னாள் டி.ஜி.பி. மீதான வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்
நடிகர் சூரி கொடுத்த பண மோசடி புகார்: முன்னாள் டி.ஜி.பி. மீதான வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கி தருவதாக கூறி, பணமோசடி செய்ததாக, முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் மீது அடையாறு போலீசில் நடிகர் சூரி புகார் செய்தார்.
ஆனால், புகார் மீது வழக்குப்பதிவு செய்து மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் நடிகர் சூரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ரமேஷ் குடவாலா முன்னாள் டி.ஜி.பி. என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை அவருக்கு சாதகமாக விசாரணை அதிகாரி செயல்படுகிறார் என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, இந்த புகாரில் கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே, அடையாறு போலீஸ் விசாரித்தால் சரியாக இருக்காது. இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றுகிறேன். துணை போலீஸ் கமிஷனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். இவரது புலன் விசாரணையை கூடுதல் போலீஸ் கமிஷனர் மேற்பார்வை செய்ய வேண்டும்.
விசாரணையை விரைவாக முடித்து 6 மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story