திங்கட்கிழமை முதல் ஐகோர்ட்டில் நேரடி வழக்கு விசாரணை


திங்கட்கிழமை முதல் ஐகோர்ட்டில் நேரடி வழக்கு விசாரணை
x
தினத்தந்தி 5 Feb 2022 1:44 AM IST (Updated: 5 Feb 2022 1:44 AM IST)
t-max-icont-min-icon

திங்கட்கிழமை முதல் ஐகோர்ட்டில் நேரடி வழக்கு விசாரணை வக்கீல்களும் வழக்கு தொடர்ந்தவர்களும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

சென்னை,

கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளை மற்றும் மாவட்ட கோர்ட்டுகளில் ஆன்லைன் மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட்டது. இந்த நிலையில், வருகிற திங்கட்கிழமை முதல் நேரடி விசாரணைக்கும் அனுமதி வழங்கி ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை மற்றும் மாவட்ட கோர்ட்டுகளில் நேரடி மற்றும் ஆன்லைன் வழியாக விசாரணை நடத்த பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார். நேரடி விசாரணையின்போது சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு விதிகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும். ஐகோர்ட்டு மற்றும் பிற கோர்ட்டு வளாகங்களில் உள்ள வக்கீல்கள் சங்கம், வக்கீல்கள் சேம்பர்கள் ஆகியவை திறக்க அனுமதிக்கப்படுகிறது. வளாகத்தில் உள்ள நூலகம் மற்றும் உணவகம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை திறக்கக்கூடாது. நேரடி விசாரணைக்கு வரும் வக்கீல்கள் மற்றும் வழக்கு தொடர்ந்தவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டவர்களாக இருக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

Next Story