சாய்னா நேவால் குறித்து சர்ச்சை கருத்து: போலீசாரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்


சாய்னா நேவால் குறித்து சர்ச்சை கருத்து: போலீசாரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்
x
தினத்தந்தி 5 Feb 2022 2:27 PM IST (Updated: 5 Feb 2022 2:27 PM IST)
t-max-icont-min-icon

பேட் மிண்டன் வீராங்கனை மற்றும் பெண் ஊடகவியலாளர் குறித்த சர்ச்சை கருத்துக்கு நடிகர் சித்தார்த் போலீசாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்

சென்னை

பிரதமரின் பஞ்சாப் பயணம் ரத்து குறித்து பேட் மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பதிவிட்ட கருத்துக்கு எதிராக நடிகர் சித்தார்த் ஆபாசமாக கருத்து பதிவிட்டிருந்தார். இவரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்தால் மன்னிப்பு கேட்டார். 

இதே போன்று பிரபல பெண் ஊடகவியலாளர் குறித்தும் அவதூறு கருத்து பதிவிட்டார்.  


இந்த நிலையில் சித்தார்த்தின் தொடர் செயலுக்கு கண்டனம் தெரிவித்த தேசிய மகளிர் ஆணையம், சென்னை மாநகர போலீசாரிடம் புகார் அளித்தது.  இந்த புகார் தொடர்பாக கடந்த மாதம் 10-ம் தேதி சென்னை போலீசார் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பினர்.

இந்த விவகாரம் தொடர்பாக காணொலி மூலமாக சித்தார்த் விளக்கம் அளித்தார்.

அதில், சாய்னா நேவால் மற்றும் ஊடகவியலாளர் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். நடிகர் சித்தார்த் மன்னிப்பு கேட்கும் காணெலி பதிவை பதிவு செய்து கொண்டனர். பின்னர் அந்த பதிவை தேசிய மகளிர் ஆணையத்துக்கு சென்னை மாநகர போலீசார் அனுப்பி வைத்தனர்


Next Story