தமிழகத்தில் இதுவரை 9½ கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் இதுவரை 9½ கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என நாகையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாகப்பட்டினம்,
நாகையை அடுத்த ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தடுப்பூசி
ஒவ்வொரு நாளும், வாரந்தோறும் முகாம் நடத்தப்பட்டு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 9 கோடியே 67 லட்சம் பேருக்கு 2 தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு 34 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்து இதுவரை 26 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 2-ம் தவணையாக 5 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி
18 வயதிற்கு மேற்பட்டோருக்கு முதல் தவணையாக 5 கோடியே 25 லட்சம் பேருக்கும், இரண்டாம் தவணையாக 4 கோடியே 5 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 2-வது தவணை தடுப்பூசியை ஒரு கோடி பேர் செலுத்தவில்லை. தடுப்பூசி செலுத்தி கொண்ட உடனே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்காது. 2 வாரத்திற்கு பிறகுதான் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பூஸ்டர் தடுப்பூசி 34 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் 4 லட்சத்து 27 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கதான் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசிகளை போட மக்கள் தானாக முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சுனாமியில் பெற்றோரை இழந்த பெண்ணின் திருமணத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
நாகையில் சுனாமியால் பெற்றோரை இழந்த 9 மாத குழந்தையான சவுமியா, 3 மாத குழந்தையான மீனா ஆகியோரை அப்போது நாகை மாவட்ட கலெக்டராக இருந்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தத்தெடுத்து வளர்த்தார். பின்னர் அவர் சென்னைக்கு பணி மாறுதலில் சென்றாலும் அடிக்கடி நாகைக்கு வந்து சவுமியா, மீனாவுடன் நேரம் செலவிட்டு வந்தார். இதனால் குழந்தைகள் 2 பேரும் ராதாகிருஷ்ணனை அப்பா என்றே அழைத்து வந்தனர்.
சவுமியா மற்றும் மீனா ஆகியோருக்கு 18 வயதான பிறகு அவர்களை நாகை புதிய கடற்கரை சாலையை சேர்ந்த மணிவண்ணன், மலர்விழி தம்பதி தத்து எடுத்து வளர்த்து வந்தனர். இந்த நிலையில் நாகையில் நடந்த சவுமியா திருமண விழாவில் ராதாகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பெற்றோரை இழந்த குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட உதவிகளை செய்ததோடு நிறுத்தி விடாமல் வாழ்வின் அடுத்த நிலையான திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த ராதாகிருஷ்ணனையும், மலர்விழி, மணிவண்ணனையும் திருமண விழாவில் கலந்து கொண்டவர்கள் பாராட்டினர்.

Related Tags :
Next Story