ஏலம் விடும் இலங்கை அரசின் நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழக மீனவர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, இலங்கை அரசு வசம் உள்ள தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 105 மீன்பிடி படகுகளை ஏலம் விடுவதற்கு இலங்கை அரசின் மீன்வளம் மற்றும் நீரியல் வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை சட்டத்துக்கு புறம்பானது. கவலைக்குரிய இந்த நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
இதுகுறித்து ஏற்கனவே கடந்த 24.1.2022 அன்று எழுதிய கடிதத்தில், 2018-ம் ஆண்டிற்கு முன்னர் சிறைப்பிடிக்கப்பட்ட 125 பழுதுபார்க்க இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை வெளிப்படையான முறையில் அகற்றுவதற்கான முயற்சிகளை இறுதி செய்யவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி பிரதமருக்கும், வெளியுறவுத்துறை மந்திரிக்கும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதில், 2018-ஆம் ஆண்டிற்கு பிறகு சிறைப்பிடிக்கப்பட்ட 75 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை இலங்கை கடற்படையினர் விரைவில் விடுவிக்க உறுதிசெய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இலங்கை ஏலத்தை தொடராது
அதனைத்தொடர்ந்து, இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் 28.1.2022 தேதியிட்ட மின்னஞ்சலில், இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்ட மீன்பிடி படகுகள் ஏலத்தை இலங்கைத்தரப்பு தொடராது என்றும் உறுதியளித்திருந்தது.
மேற்குறிப்பிட்ட நோக்கத்திற்காக இலங்கை செல்லவிருந்த அதிகாரிகளின் உத்தேசப்பயணத் திட்டத்திற்கு, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் இசைவாணை வழங்கியுள்ளதுடன், அப்பயணத்திற்கான புதிய தேதிகளை இறுதிசெய்யுமாறும், இலங்கைத் தரப்பிடமிருந்து அதற்கான ஒப்புதலைப் பெற்று, விரைவில் (குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே) அதைத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. தமிழக அரசு முன்மொழிந்த தேதிகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், இந்த பயணத்திற்கான திருத்தப்பட்ட தேதி 1.3.2022 முதல் 6.3.2022 வரை என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் முயற்சிகள்
இந்த சூழ்நிலையில், இலங்கை அரசு தான் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, எந்தவிதமான ஆலோசனையுமின்றி தொடர்ந்துள்ள ஏல நடவடிக்கை, இதற்குத் தீர்வு காணும் நோக்கத்துடன் செயல்பட்டுவரும் இந்தியத் தூதரகம் மற்றும் தமிழக அரசின் முயற்சிகளை தடம்புரள செய்வதாக அமையும். மீட்க முடியாத நிலையில் உள்ள மீன்பிடிப் படகுகள் உரிய நீதித்துறை நடைமுறைகளைப் பின்பற்றி, பல்வேறு இலங்கை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலே கூறப்பட்ட காரணங்களைக் கருத்தில்கொண்டு, இலங்கையால் முன்மொழியப்பட்ட ஏலத்தை தடுத்து நிறுத்திடவும், 2018-ம் ஆண்டிற்கு முன்னர் சிறைபிடிக்கப்பட்ட 125 பழுது பார்க்க இயலாத நிலையில் உள்ள தமிழக படகுகள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்பார்வையிட அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய மீன்பிடி படகுகளின் உரிமையாளர்களின் உத்தேச பயணத்திற்கு இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதலை பெறவேண்டும்.
அவசரமாக தலையிடவேண்டும்
2018-க்கு பிறகு சிறைப்பிடிக்கப்பட்டு, இலங்கையின் பல்வேறு கடற்படை தளங்களில் நிறுத்தப்பட்டுள்ள 75 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை விடுவிக்கும் முயற்சியில் பிரதமர் அவசரமாக தலையிட வேண்டும். இதன்மூலம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story