10,12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு தேதி மாற்றம் - அரசு தேர்வுகள் இயக்ககம்


10,12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு தேதி மாற்றம் - அரசு தேர்வுகள் இயக்ககம்
x
தினத்தந்தி 8 Feb 2022 2:38 PM IST (Updated: 8 Feb 2022 2:38 PM IST)
t-max-icont-min-icon

10,12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

சென்னை,

பொதுத்தேர்வுக்கு முன்னதாக 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களை தயார்படுத்தும் வகையில் திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. அவ்வகையில் 10-ம் வகுப்புக்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு வரும், 9-ந்தேதி துவங்கி 15 வரையும், இரண்டாம் கட்ட தேர்வு மார்ச் 28-ந்தேதி துவங்கி ஏப்ரல் 4 வரையும் நடத்தப்படுகிறது. 

இதேபோல் 12-ம் வகுப்புக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு வரும் 9-ந்தேதி தொடங்கி 16 வரையும், இரண்டாம் கட்ட தேர்வு மார்ச் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந்தேதியும் முடிகிறது. பொதுத்தேர்வைப்போல் திருப்புதல் தேர்வும் நடத்தப்படவுள்ளதால் அனைத்து மாவட்ட பள்ளிகளில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில்,  10,12 ஆம் வகுப்புகளுக்கு நாளை மறுநாள் நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு வரும் 17ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிப்.10ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெறுவதால் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

எனவே 10,12 ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்திற்கான தேர்வுத்தேதி மாற்றம் குறித்த விபரத்தினை முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் வாயிலாக அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அறியும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Next Story