நீட் தேர்வு எதிர்ப்புக்கு அ.தி.மு.க. முழு ஆதரவு- எடப்பாடி பழனிசாமி
நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது
சென்னை ,
நீட் தேர்வில் விலக்கு கோரி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டதை கவர்னர் ஆர்.என். ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார்.
மசோதா திருப்பி அனுப்பியதை தொடர்ந்து பிப்ரவரி 5-ஆம் தேதி சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்துக்கட்சி கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது
இந்நிலையில் சட்டசபையில் இன்று நீட் தேர்வு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
நீட் எதிர்ப்பு விவகாரத்தில் அ.தி.மு.க. எப்போதும் உறுதியாக உள்ளது. நீட் தேர்வு அ.தி.மு.க.வால் தான் கொண்டு வரப்பட்டது என்று தவறான பிரசாரம் செய்யப்படுகிறது.
நீட் தேர்வை ரத்து செய்ய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அ.தி.மு.க. முழு ஆதரவு அளிக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story