மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 8 Feb 2022 2:49 PM IST (Updated: 8 Feb 2022 2:49 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே செங்கிப்பட்டியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் மேலும் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர்,

கரூரை சேர்ந்த சம்சுதீன் (52) மற்றும் அவரது குடும்பத்தினர் நாகூர் தர்காவிற்க்கு சென்று காரில் திரும்பி கொண்டிருந்தனர். திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது மெக்கானிக் அந்தோணி சாமி என்பவரின் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியதில்  காரில் இருந்த 6 பேர் உள்பட மொத்தம் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் காரில் இருந்த சம்சுதீன் மருமகன் ஷேக் மைதீன் (30) மற்றும் அந்தோணிசாமி (54) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இது குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Next Story