அ.தி.மு.க. தேர்தல் வழக்கு: இருதரப்பு பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு


அ.தி.மு.க. தேர்தல் வழக்கு: இருதரப்பு பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 9 Feb 2022 12:09 AM IST (Updated: 9 Feb 2022 12:09 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. தேர்தல் வழக்கு: இருதரப்பு பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலை எதிர்த்து அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதற்கிடையில் கடந்த டிசம்பர் 6-ந் தேதி ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர். இதன்பின்னர், கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக்கோரி அ.தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பினரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற மார்ச் 8-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Next Story