சட்டமன்றத்தில் மீண்டும் ‘நீட்’ விலக்கு மசோதா: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
சட்டமன்றத்தில் மீண்டும் ‘நீட்’ விலக்கு மசோதா: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு ஜனாதிபதிக்கு உடனடியாக அனுப்பி வைக்க கவர்னருக்கு வலியுறுத்தல்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்கு ‘நீட்’ தேர்வு கட்டாயம் என்பதற்கு நியாயமான காரணங்கள் ஒன்று கூட இல்லை. அதனால்தான் ‘நீட்’ தேர்வு கூடாது என்று கடந்த 12 ஆண்டுகளாகவே பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. அரசியல்ரீதியாக மாற்றுக் கருத்துகள் இருந்தாலும் கூட, ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக தமிழகத்தை ஆளும் கட்சிகள் எடுக்கும் அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் பா.ம.க. ஆதரவளித்து வருவதுடன், ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்ட ‘நீட்’ விலக்கு சட்டம் மீண்டும் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதற்கு எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டியது அரசியலமைப்பு சட்ட கடமையாகும். அதை மதித்து ‘நீட்’ விலக்கு சட்டத்திற்கு, ஒரு நாள் கூட தாமதிக்காமல், உடனடியாக கவர்னர் ஒப்புதல் அளித்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன்பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலை பெறுவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமூகநீதி, பெண்ணுரிமை, ஒடுக்கப்பட்டோரின் கல்வி உரிமை, மாநில உரிமை, மக்களாட்சி உரிமை போன்ற பல தத்துவ விளக்கங்களை உள்ளடக்கியதாக முதல்-அமைச்சரின் உரையும், ஒருமித்த கருத்துகளை வழங்கிய சட்டமன்ற கட்சித் தலைவர்களின் உரைகளும் அமைந்து, கவர்னர் திருப்பி அனுப்பிய சட்ட வரைவினை மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றி கவர்னருக்கே திருப்பி அனுப்பியது வரலாற்று குறிப்பாகும்.

Related Tags :
Next Story