நடிகருக்கு கொலை மிரட்டல் கமிஷனர் அலுவலகத்தில் புகார்


நடிகருக்கு கொலை மிரட்டல் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
x
தினத்தந்தி 9 Feb 2022 2:57 AM IST (Updated: 9 Feb 2022 2:57 AM IST)
t-max-icont-min-icon

நடிகருக்கு கொலை மிரட்டல் கமிஷனர் அலுவலகத்தில் புகார்.

சென்னை,

சென்னை சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலை, 10-வது அவெனியூவில் வசிப்பவர் மோகன்சர்மா. இவர் தமிழ் சினிமாவில், சச்சின், அப்பு, சுயம்வரம், பார்த்திபன் கனவு போன்ற படங்களில் நடித்துள்ளார். படம் தயாரித்துள்ளார். இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த வருடம் மார்ச் மாதம் எனது வீட்டில் இருந்து, வெளியில் போக காரை எடுத்தேன். அப்போது மர்ம நபர் ஒருவர், எனது வீட்டு முன்பு காரை நிறுத்திக்கொண்டு எடுக்க மறுத்தார். காரை எடுக்கச்சொன்னபோது, அந்த நபர் என்னிடம் சண்டை போட்டார். மேலும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, இரும்பு கம்பியால் என்னை தாக்க முற்பட்டார். அவரது கார் எண்ணுடன், எனக்கு கொலை மிரட்டல் விடுத்து, தாக்க முயற்சித்தது தொடர்பாக சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனக்கு பாதுகாப்பு இல்லாதது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டுள்ளது. எனவே நான் கொடுத்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story