செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை...!
நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீரபாண்டி,
திருப்பூர்-மங்கலம் சாலை பூச்சி காட்டைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் அவனாசி குமரேசன் (வயது 18). இவர் பெருந்துறை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் வீட்டில் இருக்கும் போதுஅதிக நேரம் செல்போனில் நேரத்தைக் செலவிட்டு வந்ததாக தெரிகிறது.
இதனால் செல்போனை பயன்படுத்த வேண்டாம் என்று அவனாசி குமரேசனுக்கு அவருடைய பெற்றோர் அறிவுரை கூறி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் அவனாசி குமரேசன் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து பெற்றோர் இருவரும் அவரவர் வேலைக்கு சென்றுவிட்டனர்.
பின்னர் மதியம் வீட்டிற்கு பெற்றோர் வந்தபோது வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து வெகு நேரம் கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவனாசி குமரேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மத்திய போலீசார் அவனாசி குமரேசன் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story